மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கானலட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 9ல் துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு கோ பூஜை, கங்க பூஜை, கணபதி பூஜை மற்றும் நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் ஹேம்நாத், லாவண்யா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement