ஆலங்குளத்தில் கண்மாய் கரை சீரமைப்பு

உத்தரகோசமங்கை, : உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளம் கண்மாயில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.

பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஆலங்குளம் கண்மாய் 400 ஏக்கர் பரப்பளவை கொண்டது. கடந்த ஒரு மாதமாக ஆலங்குளம் கண்மாய் கரையில் மழைக் காலங்களில் ஏற்படும் மண்ணரிப்பை தடுக்க 300 மீ.,க்கு சிமென்ட் பக்கவாட்டு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.

சமீபத்தில் பெய்த மழையால் ஆலங்குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பெருவாரியான விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்துள்ளதால் நிலத்தை காய வைத்து பின் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை பாதிப்பால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.

கண்மாய் கரை ஓரத்தில் அமைக்கப்படும் தடுப்புச் சுவர் கட்டுமானப்பணிகள் தரமாக இருக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement