கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்

கே.டி.எம்., நிறுவனம், அதன் அட்வெஞ்சர் பைக் அணிவகுப்பை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், '250 அட்வெஞ்சர், 390 அட்வெஞ்சர் எக்ஸ் மற்றும் 390 அட்வெஞ்சர்' ஆகிய பைக்குகள் அடங்கும்.

250 அட்வெஞ்சர்



இந்த பைக்கில் மறுசீரமைக்கப்பட்ட சேசிஸ், டியூக் 250 பைக்கில் இருக்கும் 249 சி.சி., புதிய இன்ஜின், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 19 மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், 825 எம்.எம்., சீட் உயரம், 227 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவையும் இதில் உள்ளன.

இதன் விலை, 12,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

விலை:ரூ.2.60 லட்சம்

390 அட்வெஞ்சர் எக்ஸ்



இந்த பைக்கின் எடை 390 அட்வெஞ்சர் பைக்கை விட 1 கிலோ குறைவாக, 182 கிலோவாக உள்ளது. இன்ஜின் மற்றும் சேசிஸில் வரை எந்த மாற்றமும் இல்லை.

மற்றபடி 250 அட்வெஞ்சர் பைக்கில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதன் விலை, ரூ. 77,000 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

விலை : ரூ. 2.91 லட்சம்

390 அட்வெஞ்சர்



இன்ஜின் மற்றும் சேசிஸில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், முழுமையான அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷகள், 830 எம்.எம்., சீட் உயரம், 21 மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ரைடு மோடுகள் உள்ளிட்ட அம்சங்கள், கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கின் எடை 6 கிலோ உயர்ந்து, 183 கிலோவாக உள்ளது. 390 அட்வெஞ்சர் வகை பைக்குகளுக்கு, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் போட்டியாக உள்ளது.

விலை: ரூ. 3.68 லட்சம்

டி.எப்.டி., டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இணைப்பு, 'பை - டைரக்ஷனல்' குயிக் ஷிப்டர், ஆப்ரோடு ஏ.பி.எஸ்., டியூப்லெஸ் டயர்கள், 'ரைடு பை ஒயர்' தொழில்நுட்பம், 14.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை மூன்று பைக்குகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டுள்ளன.

Advertisement