மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுசூகி 'ஜிம்னி' எஸ்.யூ.வி.,க்கு ஜப்பானில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகமான நான்கு நாட்களில் 50,000 முன்பதிவுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் வினியோகம், ஏப்ரல் மாதம் முதல் அங்கு துவங்குகிறது.
அந்நாட்டில், மாதம் 1,200 ஜிம்னி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், விற்பனையை விட அதிகமாக முன்பதிவு ஆனதால், தற்போது இதன் முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐந்து கதவுகள் கொண்ட இந்த ஜிம்னி கார், ஹரியானாவில் உள்ள மாருதியின் குருகிராம் ஆலையில் தயாரிக்கப்பட்டு, ஜப்பானுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்திய மதிப்பில் அதன் விலை, 14.86 லட்சம் முதல் 15.41 லட்சம் ரூபாயாக உள்ளது.
ஆஸ்திரேலியா, மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா என 100க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்த கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
'பிரான்க்ஸ்' காருக்கு பிறகு, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரண்டாவது இந்திய கார் இது.
மேலும்
-
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்; தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு
-
முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!
-
அமெரிக்க ஆசிரியரை விடுதலை செய்தது ரஷ்யா; டிரம்புக்கு இன்னொரு வெற்றி
-
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை