எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது

எம்.ஜி., நிறுவனம், அதன் 'ஆஸ்டர்' காரின் விலை உயர்ந்த மாடலில் மட்டுமே வந்த 1.3 லிட்டர், டர்போ இன்ஜின், 2025 அணிவகுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் வகை ஆஸ்டர் கார்களின் விற்பனை சரிந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை, தற்போது, 9.99 லட்சம் ரூபாய் முதல் 17.55 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

நடப்பாண்டு முதல், 1.5 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜினில் மட்டும் ஆஸ்டர் கார் வருகிறது. பானரோமிக் சன்ரூப் மற்றும் ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் ஆகியவை அடிப்படை அம்சங்களாக மாற்றப்பட்டுள்ளன.

Advertisement