ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

சங்கராபுரம், : சங்கராபுரத்தில், ஊராட்சி தலைவர்களுக்கு, 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணி அம்மாள் வரவேற்றார். முகாமில் 29 ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement