பவுர்ணமி ஆன்மிக நடையணம்

வில்லியனுார் : வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் சென்றனர்.

வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று 37வது மாத பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடையணம் மாட வீதிகள் வழியாக மூலக்கடை, சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, உறுவையாறு, ஆச்சார்யா புரம், கோட்டைமேடு வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

ஆன்மிக நடைபயணத்தில் புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் சிவாச்சார்யர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement