குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே காவிரி குழாய் உடைப்பு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

முதுகுளத்துார் பகுதியில் ரோட்டோரத்தில் காவிரி குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே கடந்த சில நாட்களாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கீழத்துாவல் அருகே காவிரி குழாய் உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சீரமைத்தனர்.

Advertisement