சின்னசேலத்தில் தமிழ் சான்றோர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில், அரிசி ஆலை அரங்கத்தில், அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில், தமிழ் சான்றோர்கள் கூட்டம் நடந்தது.

அரிசி ஆலை சங்க முன்னாள் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கம்பன் கழக தலைவர் பாலமுருகன், கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை தலைவர் சத்தியநாராயணன், சின்னசேலம் தமிழ் சங்க தலைவர் கவிதைத்தம்பி, செயலாளர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து வணிகர் சங்க செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழ் சான்றோர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அனைத்து வணிகர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் கவிஞர் தங்க ராசுவின் படத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் ராஜேந்திரன், குணசேகரன், முகமது ஹபீப், கிருஷ்ணா, தனவேல், நாகராஜன் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Advertisement