அரசு ஊழியர்கள் தர்ணா
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852776.jpg?width=1000&height=625)
கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா பேராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், துணை தலைவர் செந்தில்முருகன், பொதுச் செயலாளர் மணிராஜ், முன்னாள் மாநில துணை தலைவர் தங்கராசு சிறப்புரையாற்றினர். போராட்டத்தில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் நிர்வாகிகள் காதர் அலி, செந்தில், பிரபாகரன், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சாமிதுரை நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
-
மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'
Advertisement
Advertisement