முருகன் கோயில்களில் தைப்பூச விழா
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852787.jpg?width=1000&height=625)
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் தைப்பூச விழா, விநாயகர் பூஜை, யாகசாலை, விபூதி அலங்காரம், திபாராதனை, சொக்கநாதர் கோயிலில் பால்குடம், காவடி எடுத்து சுவாமிக்கு பாலபிேஷகம், உற்ஸவ மூர்த்திக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
குமரய்யா கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பட்டணம்காத்தான் சேதுபதிநகர் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலர் கோயில் மற்றும் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலமுருகன் சன்னதியில் அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை, கந்தசஷ்டி பஜனை வழிபாடு நடந்தது.
வெளிபட்டணம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமநாதபுரம் வடக்கு தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலாபிேஷகம், அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது,
* மேதலோடை பால தாண்டாயுதபாணி கோயிலில் பிப்.,2 ல் கொடியேற்றத்துடன் தைப்பூசத்திருவிழா துவங்கியது. தினமும் பாலதண்டாயுத பாணிக்கும், பாலசக்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
தைப்பூச திருவிழாவான நேற்று காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் பெரிய ஊருணியில் இருந்து மயில் காவடி, பால்குடம் எடுத்தும், 10 அடி நீள வேல் அலகு குத்தியும் மேள தாளத்துடன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
----*கடலாடியில் தண்ணீர் பந்தல் மடாலயம் அமைந்துள்ள இடத்தில் பால தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பிப். 2ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் மூலவர் பால தண்டாயுதபாணி முருகனுக்கு தீபாராதனைகள் நடந்தது.
* ஆர்.எஸ்.மங்கலம் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை சார்பில் வள்ளலார் உருவப்படத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சிவனடியார்களால் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச் செங்குடி பத்ரகாளியம்மன், கருப்பண சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நாடார்வலசை செல்வகணபதி, பாலமுருகன் ஆலயத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், முள்ளிமுனை சுப்பிரமணியர் கோயில்களில் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தன.வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிக்கபட்டார். முள்ளிமுனையில் 108 பானைகளில் பக்தர்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று கோயிலில் வழிபாடு செய்தனர்.
*முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் வேல் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. சிவன் கோயிலில் வேலுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை நடந்தது. ஊர்வலமாக முருகன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். முருகனுக்கு பால், சந்தனம்,மஞ்சள், பழங்கள், திரவிய பொடி உட்பட 33 வகை அபிஷேகம் நடந்தது.
முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்