ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
சிவகங்கை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர்,ரவி,குமரேசன், மாவட்ட துணை தலைவர் அமலசேவியர், மாவட்ட துணை செயலாளர்கள் பஞ்சு ராஜ்,முத்துக்குமார் கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசை பின்பற்றி ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை ஆராய்வதற்கு மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்ததன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்ற அரசு நினைக்கிறது. நிறுத்தப்பட்ட சரண் விடுப்பு, ஊக்க ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் வருகிற பிப்.14 அன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம். பிப்.25 அன்று நடைபெற உள்ள மாவட்ட தலைநகர் மறியலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.