கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கோவிலுார் : சோழவாண்டியபுரம் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.

இதனையொட்டி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கலசம் புறப்பாடாகி விமான கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement