வராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, மாடூர் டோல்கேட் அருகே உள்ள பஞ்சமுக மஞ்சள் வராஹி அம்மன் கோவிலிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், மூல மந்திர ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜை உள்ளிட்டவைகளும், காலை 9:00 மணிக்கு விநாயகர், முருகன், பஞ்சமுக மஞ்சள் வராஹி அம்மன், ஜல வராஹி, நவக்கிரக கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி, ராஜகோபால ஐயங்கார் குழுவினர், மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

Advertisement