நீர் பாசன பைப் திருட்டு 2 வாலிபர்கள் கைது 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் இருந்த சொட்டு நீர் பாசன பைப் ரோல்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பகதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் வெங்கடேசன், 28; இவர், தனது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 32 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 பைப் லைன் வாங்கி வைத்திருந்தார். கடந்த 4 ம் தேதி பைப் ரோல்கள் திருடு போனது.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பைப் ரோல்களை திருடிய நல்லாத்துார் சடையன் மகன் சிலம்பரசன், 30; மாரியாப்பிள்ளை மகன் பிரபாகரன், 21; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Advertisement