டூவீலர் விபத்தில் பெண் பலி

சிவகங்கை : சிவகங்கை கண்ணமுத்தாங்கரை தனபாலன் மனைவி விஜயலட்சுமி 43. இவர் நேற்று மதியம் 12:00 மணியளவில் மகன் ஹமீதுபாலன் 19 இரண்டாவது 17 வயது மகன் உள்ளிட்ட 3 பேரும் ஒரே டூவீலரில் மறவமங்கலத்தில் இருந்து பரமக்குடி சென்றனர்.

மறவமங்கலம் சந்தை அருகே சென்றபோது ரோட்டில் கிராவல் மண்ணில் டூவீலரின் சக்கரம் சிக்கி நிலை தடுமாறி விழுந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த விஜயலட்சுமி தலையில் அடிபட்டு இறந்தார்.

Advertisement