ஊழல் குறைந்த நாடுகள்: 96ம் இடத்தில் இந்தியா

8

புதுடில்லி : 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு வெளியிட்ட 2024க்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்று புள்ளிகள் சரிந்து 96வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு 1995 முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அரசு துறையில் நிலவும் ஊழல் குறித்து நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து இப்பட்டியலை வெளியிடுகின்றனர்.


இதற்காக 0 - 100 என்ற அளவை பயன்படுத்துகின்றனர். இதில் 0 என்பது அதிக ஊழலையும், 100 என்பது குறைந்த ஊழலையும் குறிக்கும். இந்த அளவீட்டின் படி இந்தியா 180 நாடுகளில் 96ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 93ம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது மூன்று புள்ளிகள் சரிந்துள்ளது.



நம் அண்டை நாடுகளான இலங்கை 121; பாகிஸ்தான் 135; வங்கதேசம் 149; சீனா 76 ஆகிய தரவரிசையில் உள்ளன. ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் டென்மார்க், பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளன.

Advertisement