3 வயது பெண் குழந்தை பலி

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த, அதகபாடி வடக்கு தெருவை சேர்ந்த கார் டிரைவர் கோவிந்தசாமி, 28. இவரது மனைவி லலிதா. இவர்களது மூத்த மகள் சிவஸ்ரீ, 3.

இவருக்கு இதய பிரச்னை இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தவரை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இண்டூர் போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement