மாயமான ஆட்டோ டிரைவர் துாக்கில் சடலமாக மீட்பு

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, ஜோதிஹள்ளியை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் சிவக்குமார், 46. இவர் கடந்த, 6ல் மாயமானார். புகார் படி, பாலக்கோடு போலீசார் சிவக்குமாரை தேடி வந்தனர்.

நேற்று காலை ஜோதிஹள்ளி கிராமத்தில் குட்டையன் என்பவருக்கு சொந்தமான புளிய மரத்தில் துாக்கில் தொங்கியபடி, ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதாக, பாலக்கோடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரித்ததில், இறந்து கிடந்தது காணாமல் போன ஆட்டோ டிரைவர் சிவக்குமார் என தெரிந்தது. பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement