தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறமிருந்து, அம்பேத்கர் நகர் வழியாக, தீர்த்தமலை இணைப்பு சாலைக்கு செல்லும் சிமென்ட் சாலை, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், 6.70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டதால், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவசர தேவைக்கு செல்லும் மருத்துவ ஊர்திகள் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாலையை முறையாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement