கொன்னையாரில் நிலா பிள்ளையார் விழா

எலச்சிபாளையம்: தைப்பூசத்தை முன்னிட்டு, எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில், கடந்த மூன்று நாட்களாக நிலா பிள்ளையார் விழா நடந்தது. இதில், பெண்கள், சிறுமியர் ஆட்டமாடி கும்மியடித்தனர்.


நேற்று முன்தினம் இரவு, மேளதாளத்துடன் முளைப்பாரி அழைத்தல், மாவிளக்கு அழைத்தல், வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை சுவாமியை திருமணிமுத்தாற்றில் விட்டு, கரையில் தீபம் ஏற்றி தீர்த்தவாரி நடத்தினர். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement