வேலை செய்ய விரும்பாத மக்கள்: இலவசங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852898.jpg?width=1000&height=625)
புதுடில்லி: இலவச திட்டங்கள் அறிவிப்பது என்பது, பொது மக்கள் வேலைக்கு செல்வதை தடுக்கிறது எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டாமா என கேள்வி எழுப்பியது.
நகர்ப்புறங்களில் வீடில்லாதவர்களுக்கு முகாம்கள் அமைப்பது தொடர்பான தொடரப்பட்ட பொது நல வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசியா அமர்வு விசாரித்தது.
அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கூறியதாவது: நகர்ப்புற வீடற்றவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்ட நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தை இறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி என உத்தரவிட்டனர். மேலும், அவர்கள், ' துரதிர்ஷ்டவசமாக, இலவச திட்டங்களினால் மக்கள் வேலை செய்ய விரும்புவது கிடையாது. அவர்களுக்கு ரேசன் பொருட்கள் இலவசமாகவே கிடைக்கிறது. எந்த வேலையும் செய்யாமல், பணமும் கிடைக்கிறது. அவர்கள் மீதான உங்களின் அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனுமதிப்பது நல்லது அல்லவா' எனக்கூறினர்.
![ஆரூர் ரங் ஆரூர் ரங்](https://img.dinamalar.com/data/uphoto/271873_205342590.jpg)
![NATARAJAN R NATARAJAN R](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![GMM GMM](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Rajarajan Rajarajan](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Subburamu Krishnasamy Subburamu Krishnasamy](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![அப்பாவி அப்பாவி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![M S RAGHUNATHAN M S RAGHUNATHAN](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
2026ம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கானதாக அமையும்; வெளியுறவுத்துறை
-
ஏக்நாத் ஷிண்டேவை புகழ்ந்த சரத்பவார்: உத்தவ் தாக்கரே கோபம்!
-
'பாக்.,கில் எனக்கு மரண தண்டனை அளிக்க முயற்சி': மார்க் ஜுக்கர்பெர்க் பகீர் தகவல்
-
பெண்களுக்கு வீட்டிலிருந்தே பணி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு புதிய திட்டம்
-
கேரளாவில் ராகிங் கொடூரம்: நர்சிங் கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைது
-
காட்டு யானை தாக்கி வயநாட்டில் இளைஞர் பலி