டிரம்ப் - புடின் தொலைபேசியில் உரை : ரஷ்யா வருமாறு டிரம்ப்பிற்கு அழைப்பு

2

மாஸ்கோ: பிரதமர் மோடி அமெரிக்க வருகை தர உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.


அரசு முறைப்பயணமாக பிரானஸ் , அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்று அந்நாட்டு அதிபர் இமானுவெனல் மெக்ரானை சந்தித்து பேசியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அத்துடன் பிரான்ஸ் பயணத்தை முடித்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசினார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து டிரம்ப்ப் வலியுறுத்தினார். இந்த உரையாடலின் போது ரஷ்யா வருமாறு டிரம்ப்பிற்கு புடின் அழைப்பு விடுத்ததாகவும், அதனை டிரம்ப் ஏற்று விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement