'போக்சோ' சிறுவனுக்கு நுாதன தண்டனை
விழுப்புரம்:விழுப்புரத்தில் போக்சோ வழக்கில் கைதான சிறுவனுக்கு, கோர்ட்டில் நுாதன தண்டனை வழங்கப்பட்டது.
விழுப்புரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டிற்குள் சிறுமி துாங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.
புகாரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் இளஞ்சிறார் நீதி மன்றத்தில் நடந்தது.
விசாரணை நடத்திய நீதிபதி, 'குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன், 3 ஆண்டுகள் விழுப்புரத்தில் உள்ள சிறுவர்கள், குழந்தைகள் நல காப்பகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை அங்குள்ள குழந்தைகளுக்கு கால்பந்து, கேரம் போட்டிகளை கற்றுத்தர வேண்டும்.
'வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை இளஞ்சிறார் குழுமத்திற்கு வரும் சிறுவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பு எடுக்க வேண்டும்' என தீர்ப்பு அளித்தார்.