பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி

புதுச்சேரி:புதுச்சேரி, காரமணிக்குப்பம் ஜீவானந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். நேற்று காலை ஹால் டிக்கெட் வாங்க வந்த மாணவர் திடீரென பிளேடால் கையை கிழித்து, முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வு பயம் காரணமாக குதித்திருக்கலாம் என, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்க மறுத்த தாய், பள்ளியில் ஏதோ நடந்துள்ளதாக சந்தேகம் எழுப்பினார். சம்பவம் தொடர்பாக கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement