திருநெல்வேலி மார்க்கெட் வளாகத்தை பொது ஏலம் விட பா.ஜ.,கோரிக்கை

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாகத்தை பொது ஏலத்தில் குத்தகைக்கு விட பா.ஜ.,கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலியில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். இதில் பாளை.,காந்தி மார்க்கெட் வணிக வளாகமும் ஒன்றாகும்.

14.90 கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தில் 439 கடைகள் உள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல்பட்டு வரும் கட்டடத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த நபர்களுக்கு மீண்டும் கடைகளை குத்தகைக்கு விட திட்டம் உள்ளது.

ஆனால் கடைகள் கைமாறி தற்போது மூன்றாம், நான்காம் நபர்களிடம் உள்ளது. எனவே மாநகராட்சியின் மற்ற வணிக வளாங்களை போல மார்க்கெட் கட்டடத்தையும் பொது இடத்தில் புதிய நபர்களுக்கு விடுமாறு பா..ஜ., வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Advertisement