பாகிஸ்தான் சாதனை வெற்றி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853049.jpg?width=1000&height=625)
கராச்சி: முத்தரப்பு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது.
பாகிஸ்தான் சென்றுள்ள தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து அணி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியது. கராச்சியில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் பவுமா (82), பிரீட்ஸ்கே (83), கிளாசன் (87) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன் எடுத்தது. வெர்ரின்னே (44) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (41), பாபர் ஆசம் (23) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய கேப்டன் முகமது ரிஸ்வான் (122*), சல்மான் ஆகா (134) சதம் கடந்து வெற்றிக்கு உதவினர். பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்னை (355) 'சேஸ்' செய்து, தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், 2022ல் லாகூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 349 ரன்னை எட்டியது.
பைனலில் (பிப். 14, கராச்சி) பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மேலும்
-
ஈரோட்டில் இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு பிப்.15ல் துவக்கம்
-
மனைவி குத்திக்கொலை வங்கி ஊழியருக்கு ஆயுள்
-
மன்னார் வளைகுடா பகுதியில் செயற்கை பவளப்பாறை அமைக்க ஏற்பாடு
-
மாசாணியம்மன் கோயில் திருவிழா மயான பூஜையில் பக்தர்கள் பரவசம்
-
மணல் கொள்ளையர் தாக்குதல் ஆட்டோ டிரைவர்கள் காயம்
-
பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்ந்தது