என்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853124.jpg?width=1000&height=625)
கோவை; கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க நிறுவனர் தலைவர் தியாகி என்.ஜி.ராமசாமியின், 82வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சிங்காநல்லுாரில் உள்ள என்.ஜி.ஆர்., மஹாலில், அவரது திருவுருவ படத்துக்கு, சங்க தலைவர் ராஜாமணி, செயலாளர்(பொ) மனோகரன், செயலாளர்கள், துணை தலைவர்கள் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடந்த கூட்டத்தில், பொதுத்துறைகளை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், நாளை முதல் வரும், 17ம் தேதி வரை ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானம் உள்ளிட்ட இடங்களில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், பரப்புரை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
என்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி மதியம், 12:00 மணிக்கு சவுரிபாளையத்தில் உள்ள செஷயர் ஹோமில், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
கள்ளக்காதல் பிரச்னை: தொழிலாளி கொலை
-
பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சுற்றிய நபர் கைது
-
'இண்டியா' கூட்டணியில் பிளவே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்
-
ரூ.100ஐ தொடும் தேங்காய்: நல்லசாமி எச்சரிக்கை
-
கொலை முயற்சி வழக்கில் 5 பேர் சரண் தி.மு.க., கவுன்சிலரை விசாரிக்க திட்டம்
-
மருத்துவ மாணவியரிடம் அத்துமீறிய ஆய்வக தொழில்நுட்பனர் 'சஸ்பெண்ட்'