கள்ளக்காதல் பிரச்னை: தொழிலாளி கொலை

ரெட்டியார்சத்திரம்:திண்டுக்கல்மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பட்டப்பகலில் நடந்த திருப்பூர் தொழிலாளி கொலையில்10பேர் கைதான நிலையில் கள்ளக்காதலே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் முருக பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வசந்த் 22. நண்பர் ஹரி பிரசாத் 22,உடன் பிப். 9ல் வாடகை காரில் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு வந்தார்.

பிப். 10ல் திருப்பூர் நோக்கி சென்றபோது மற்றொரு காரில் வந்த கும்பல் இக்கார் மீது மோதி வசந்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. மதுரை மருத்துவமனையில் வசந்த் இறந்தார். இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில் 'தாடிக்கொம்பை சேர்ந்த அழகர்ராஜா , மனைவி கலைச்செல்வி திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தனர். உடன் வேலை பார்த்த வசந்த், கலைச்செல்வி இடையே தொடர்பு ஏற்பட்டது. இதில் 2024 செப்டம்பரில் அழகர்ராஜாவை வசந்த் வெட்டி கொன்றார். சிறை சென்று வெளிவந்த நிலையில் தாடிக்கொம்பில் இருந்த கலைச்செல்வியை சந்திக்க வசந்த் வந்தார். கலைச்செல்வி மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையறிந்த கலைச்செல்வியின் சகோதரர் குமரேசன் 39, ஆதரவாளர்களான தாடிக்கொம்பு சபரிபாலன் 29, சந்தனக்குமார் 32, அடியனுாத்து சங்கர்மணி 25, திண்டுக்கல் சீனிவாசபெருமாள் 25, சின்னராஜ் 45, முத்துசாமி 32, செல்லப்பாண்டி 41,திருநாவுக்கரசு 35, போஸ் 36,ஆகியோர் சேர்ந்து வசந்த்தை கொலை செய்தனர்.அவர்கள் கைது செய்யப்பட்டனர்.மேலும் சிலரிடம் விசாரணை நடக்கிறது' என்றனர்.

Advertisement