கோவையில் வீடுகள் விற்பனை36 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி:கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட, இந்தியாவின் டாப் 15 இரண்டாம் கட்ட நகரங்களில் வீடுகள் விற்பனை மதிப்பு, கடந்தாண்டு 20 சதவீதம் அதிகரித்து, 1.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'பிராப் ஈக்விட்டி' தெரிவித்துள்ளது.
ஆமதாபாத், சூரத், வதோதரா, காந்தி நகர், நாசிக், ஜெய்ப்பூர், நாக்பூர், புவனேஸ்வர், மொஹாலி, விசாகப்பட்டினம், லக்னோ, கோவை, கோவா, போபால் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவையே இந்த 15 நகரங்களாகும்.
எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, அதிகபட்சமாக கோவையில் வீடுகள் விற்பனை 36 சதவீதம் உயர்ந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் 21 சதவீதம் சரிந்துள்ளது. விற்பனை மதிப்பை பொறுத்தவரை புவனேஷ்வரில் 47 சதவீதம் அதிகரித்தும்; நாசிக்கில் 2 சதவீதம் சரிந்தும் உள்ளது.
மதிப்பின் அடிப்படையில் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தாலும், எண்ணிக்கையின் அடிப்படையில் 4 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. கட்டட மூலப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஊகங்கள் காரணமாக, இந்த நகரங்களில் வீடுகளின் விலை விரைவாக அதிகரித்து வருவதை இது உணர்த்துகிறது.
எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகபட்சமாக கோவையில் வீடுகள் விற்பனை 36 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆண்டு வீடுகளின் எண்ணிக்கை வீடுகளின் மதிப்பு (ரூ. லட்சம் கோடியில்)2023 1,71,903 1.282024 1,78,771 1.53வளர்ச்சி (%) 4 20