கொடைக்கானலில் இதமான சீதோஷ்ண நிலை

கொடைக்கானல்:கொடைக்கானலில் பளிச்சிடும் வெயில், காற்றில் நிலவும் ஈரப்பதம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நிலவியது.கொடைக்கானலில் குளு,குளு சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் விரும்பி வருகின்றனர்.

தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் இதன் தாக்கம் மலைப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை.

ஆப் சீசனில் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். நேற்று மதியத்திற்கு பின் பனியின் தாக்கம் அதிகரித்து குளிர் நிலவியது.

Advertisement