சிலந்திகளை கட்டுப்படுத்தும் பூஞ்சைகள்

சிலந்தியின் உடலில் புகுந்து அதனுடைய மூளையைக் கட்டுப்படுத்தி, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு பூஞ்சையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எறும்புகளைக் கட்டுப்படுத்தும் இப்படியான பூஞ்சைகள் பற்றி விஞ்ஞான உலகம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது. ஆனால் சிலந்திகளும் இப்படியான பூஞ்சைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது.

இந்தச் சிலந்தி மெட்டிலினா மெரியனே (Metellina merianae) என்ற இனத்தைச் சேர்ந்தது. இந்தச் சிலந்தியைத் தாக்கும் பூஞ்சைக்கு, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு தான் ஜிபெல்லுலா அட்டன்பரோகி (Gibellula attenboroughii) என்று பெயரிடப்பட்டது.

இப்படியாகப் பாதிக்கப்பட்ட பல சிலந்திகள் வட அயர்லாந்தின் குகைகளில் வாழ்கின்றன என்பது பின்னர் தெரியவந்தது. இந்தச் சிலந்திகள் பொதுவாகக் குகைகளின் இடுக்குகளில் வாழும். ஆனால், இந்தப் பூஞ்சை பாதித்த பின், கொஞ்சம் கொஞ்சமாக இவை தங்களுடைய வலைகளை விட்டு வெளியே, காற்றோட்டமான இடங்களுக்கு வருகின்றன.

வந்த பின் சிலந்திகள் இறந்து விடும். இங்குள்ள காற்றைப் பயன்படுத்திப் பூஞ்சைகள் தங்களுடைய விதைகளைப் (Spores) பரப்பி இனப்பெருக்கம் செய்கின்றன.

Advertisement