அறிவியல் துளிகள்

01. சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள், காஸ்மிக் கதிர்களில்இருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ரோ ஜெல்லைப் பயன்படுத்த முடியும் என்று, பெல்ஜியம் பல்கலை கண்டுபிடித்துள்ளது.
Latest Tamil News
02. உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்பதை அறிவோம். சமீபத்தில் கிரீன்லாந்து நாட்டில் உள்ள ஒரு பனி ஏரி உருகியதால் 3 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் வெளியேறி உள்ளது. இது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Latest Tamil News
03. ஒரிகாமி (origami) என்பது காகிதத்தில் விதவிதமான வடிவங்களை உருவாக்கும் ஜப்பானிய கலை. இதை அடிப்படையாகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலை கட்டடக்கலை மாணவர், ஒருவர் தரை தளத்தை வடிவமைத்துள்ளார். இதை உருவாக்க வழக்கமான அளவை விட குறைவான கான்கிரீட்டும், இரும்புமே பயன்பட்டுள்ளன.
Latest Tamil News
04. தக்காளி முதலிய தாவரங்களில் இருக்கும் சேர்மம் லைக்கோபீன் (Lycopene). இது மனித மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்கும் தன்மை உடையது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Latest Tamil News
05. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகே வந்து செல்லும் விண்கல் பென்னு. இங்கிருந்து நாசாவால் கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகளைச் சோதித்த விஞ்ஞானிகள், இதில் உயிர் உற்பத்திக்குத் தேவையான பாஸ்பேட், க்ளோரைட் உள்ளிட்ட உப்புகள், அமினோ அமிலங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

Advertisement