என்.எல்.சி., தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை?

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, மனைவி, மகனுடன் என்.எல்.சி., தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 53; நெய்வேலி என்.எல்.சி., மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். இவரது மனைவி தேவி, 36. இவர்களது மகன் பிரவீன்குமார், 12; என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார்.

நெய்வேலியில் குடியிருந்த முத்துக்குமரன், தன் பெரியம்மாவின் காரியத்திற்காக, நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்தினருடன் அஜீஸ் நகருக்கு வந்தார். இந்நிலையில், நேற்று காலை, அஜீஸ் நகர் அருகே உள்ள கல்குட்டையில், தேவி, பிரவீன்குமார் தண்ணீரில் மூழ்கியும், அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் மரத்தில் முத்துக்குமரன் துாக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர். மூவரின் உடல்களை மீட்ட எடைக்கல் போலீசார், அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement