பன்னீர்செல்வம் மீது வழக்கு கம்யூ., கோரிக்கை
சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
பட்டியல் ஜாதியினருக்கு நிபந்தனை அடிப்படையில், அரசு வழங்கிய உபரி நிலத்தை மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வாங்குவது சட்டப்படி செல்லாது.
அது தெரிந்தும் அதிகார துஷ்யபிரயோகம் செய்து வருவாய்த் துறை அதிகாரிகளை பயன்படுத்தி தன் பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல் மோசடியானது.
நிலத்தை உடனே மீட்பதுடன் மோசடியில் ஈடுபட்ட பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் வாங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement