ஆர்.சி.பி., அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வு; வாழ்த்து சொன்ன கோலி

1

பெங்களூரூ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 8வது புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் விளையாடும் 10 அணிகளில் ஒன்றாக இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த அணியில் விராட் கோலி இடம்பெற்றிருப்பதால், அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக திகழ்ந்து வருகிறது. இதுவரையில் 17 ஐ.பி.எல்., சீசன்கள் முடிந்த நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது.


ஒவ்வொரு சீசனிலும் பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கும் இந்த அணி, 2009, 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது. பல்வேறு ஸ்டார் வீரர்களை கொண்டிருந்தாலும், கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைக்காதது அந்த அணியின் நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றம் தான்.


அடுத்த மாதம் இறுதியில் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் புதிய கேப்டனுடன் களமிறங்க ஆர்.சி.பி., அணி முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பை இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆர்.சி.பி., அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். கோலி மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வீரர் பட்டிதார் மீது அந்த அணி நம்பிக்கை வைத்துள்ளது. புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பட்டிதாருக்கு கோலி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


கேப்டன்கள்





டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் விக்டோரி, விராட் கோலி, வாட்சன், டூபிளசிஸ் ஆகியோர் கேப்டனாக இருந்துள்ளனர். தற்போது, 8வது கேப்டனாக பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement