தேர்தல் வாக்குறுதிகள்; வெள்ளை அறிக்கை தாருங்கள்; தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கேள்வி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853731.jpg?width=1000&height=625)
விழுப்புரம்: தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க.,வுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டர் ரூ.100 வழங்கப்படும். சட்டசபை நிகழ்ச்சி நேரலை என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளது. பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றாமல் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தேர்தல் நேரத்தில், விலை மதிக்க முடியாத ஓட்டுக்கள், பொன்னான ஓட்டுக்கள், உயிரிலும் மேலான ஓட்டுக்கள் என கேட்கின்றனர். இந்த 3 சொற்களும் எந்த இடத்திலாவது பொருத்தமாக இருக்கிறதா? எந்த கட்சிக்காவது பொருத்தமாக இருக்கிறதா? இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.500 கோடி சந்தை முதலீடு உள்ள குடும்பத்திற்கு மணமகன் தேவை: வினோத திருமண விளம்பரம் வைரல்
-
திருமண விழாவில் அழையா விருந்தாளி; உறவினர்கள் அலறியடித்து ஓட்டம்
-
புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல்
-
இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிட்டார் அதானி
-
திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.4 கோடியாம்!
-
அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் இ.பி.எஸ்.,; ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement