இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853733.jpg?width=1000&height=625)
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளை மேற்கொள்ள 1992ம் ஆண்டு தமிழக சட்டசபையால் உயர் கல்வி மன்றம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1). பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர்.
2). வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி.
3). முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO.
4). சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர்.
ஆகியோர் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்
-
ரூ.500 கோடி சந்தை முதலீடு உள்ள குடும்பத்திற்கு மணமகன் தேவை: வினோத திருமண விளம்பரம் வைரல்
-
திருமண விழாவில் அழையா விருந்தாளி; உறவினர்கள் அலறியடித்து ஓட்டம்
-
புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல்
-
இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிட்டார் அதானி
-
திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.4 கோடியாம்!
-
அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் இ.பி.எஸ்.,; ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு