போராட்டக்காரர்கள் மீது பாய்ந்த கார்; 28 பேர் படுகாயம்

3

முனிச்: ஜெர்மனியில், போராட்டம் நடத்தியவர்கள் மீது கார் பாய்ந்த சம்பவத்தில், 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜெர்மனியின் தென் பகுதியில் அமைந்துள்ள மியூனிச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடக்கிறது. இதற்காக உலக தலைவர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி இருந்த நேரத்தில், அதிவேகத்தில் வந்த கார் அவர்கள் மீது பாய்ந்துள்ளது. இதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த போலீசார், கார் ஓட்டி வந்த 24 வயது நபரை கைது செய்தனர். அவர், ஆப்கானை சேர்ந்த அகதி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர், இதற்கு முன், திருட்டு, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


இதையடுத்து சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தினர் மீது பாய்வதற்கு முன்னதாக, காரின் வேகம் அதிகரித்ததாக நேரில் பார்த்தவர் தெரிவித்தார். மேலும், கார் நிற்காமல் செல்வதை கண்டதும், அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அதன் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார்.

Advertisement