பட்டூர் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

மாங்காடு,:மாங்காடு நகராட்சியில் பட்டூர் அமைந்துள்ளது. மாங்காடில் இருந்து மவுலிவாக்கம் செல்லும் சாலையில், பட்டூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்தில் அப்பகுதியினர் சென்று வருகின்றனர்.

மாங்காடு பேருந்து நிலையத்தின் உள்ளே நாய், மாடுகள் சுற்றி திரிகின்றன. ஆட்டோ, பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்தின் உள்ளே நுழைய முடியாமல் அரசு பேருந்து ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, பேருந்து நிலையத்தின் உள்ளே தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement