இனியாவது... வடசென்னை மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?

மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?


வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவு, 340 ஏக்கர் பரப்பிலான கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை மலைபோல் குவிந்து வடசென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பை அகற்ற மாற்று இடம் தேடும் நிலைமை உருவானது. இதையடுத்து, பல லட்சம் டன் கணக்கிலான திடக்கழிவு, 'பயோ மைனிங்' முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு, பணிகளை துவங்கி உள்ளது.

Advertisement