வளைகாப்பு நிகழ்ச்சி; கர்ப்பிணிகளுக்கு புத்துணர்வு

கோவை; அந்த அரங்கில் நிறைந்திருந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஒவ்வொருவர் முகத்திலும், சந்தோச ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன. வண்ண வண்ண வளையல்களும், பல விதமான உணவு வகைகளும், பெற்றோர், கணவர், உறவினர் புடைசூழ ஒவ்வொரு பெண்ணுக்கும் வெட்கம் கலந்த மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பு. அதை சுகமாக்குவதில் தான் அத்தனை பேரின் பங்கும் உள்ளது. சுகப்பிரசவத்துக்கு மேற்கொள்ளப்படும் ஒரு பூஜை தான் வளைகாப்பு.

அத்தகைய வளைகாப்பு நிகழ்ச்சி உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் சார்பில் கோவை சாய்பாபா காலனி அனன்யா நெஸ்ட் குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான கர்ப்பிணிகள், தங்கள் கணவர், பெற்றோர், உறவினர்களுடன் பங்கேற்றனர்.

உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் மைய இயக்குனர் குமரேஷ் பாபு கூறுகையில், ''கடந்த, மூன்று ஆண்டுகளில், 30 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனையுடன் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்த இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளால் கர்ப்பிணிகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், உடல், மன நலத்துக்காகவும், உணர்வு பூர்வமாக மருத்துவமனையுடன் ஒன்றிணையவும் முடியும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், 40 - 50 கர்ப்பிணிகள் பங்கேற்கின்றனர். இதன் வாயிலாக நல்ல விசயங்கள் பரிமாறப்படுகின்றன. இதன் வாயிலாக அவர்களின் பிரசவம் நல்ல முறையில் நடக்க வழி ஏற்படுகிறது,'' என்றார்.

Advertisement