இன்றிரவு முதல் 16 வரை வரி செலுத்த முடியாது

கோவை; சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் உள்ள யு.டி.ஐ.எஸ்., மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான பராமரிப்பு பணி நாளை (15ம் தேதி), நாளை மறுதினம் (16ம் தேதி) நடைபெறுகிறது. அதனால், யு.டி.ஐ.எஸ்., இணைப்பு இன்று (14ம் தேதி) இரவு, 8:00 மணி முதல் இயங்குவது நிறுத்தப்படும்.

கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்கள் மற்றும் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து வரி வசூல் மையங்களிலும் வரி வசூல் பணி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்றிரவு, 8:00 மணி முதல், 16ம் தேதி வரை தற்காலிகமாக செய்ய முடியாது; பொதுமக்கள் வரியினங்கள் செலுத்த முடியாது என, கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement