கருப்புக் கொடி ஏற்றி போராட விசைத்தறியாளர் முடிவு
பல்லடம்; கூலி உயர்வை வலியுறுத்தி, விசைத்தறி கூடங்களில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டம் நடத்துவது என, கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து அதன் செயலாளர் கோபாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த, 2014 முதல் கூலி உயர்வு பிரச்னைக்காக போராடி வருகிறோம். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பலமுறை விசைத்தறியாளர்கள் பங்கேற்றும், ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் நிராகரித்து வருகின்றனர்.
சமீபத்தில், திருப்பூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
தொடர்ச்சியாக கூலி உயர்வை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. கடந்த சில தினங்களுக்கு முன், சோமனுார் மற்றும் தெக்கலுார் பகுதிகளில், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டு கட்டங்களாக நடந்தது.
இருப்பினும், எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனை தொடர்ந்து, அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது என, நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாளை (இன்று) முதல், ஒவ்வொரு விசைத்தறிக்கூடங்கள் மற்றும் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும்.
ஒப்பந்த கூலி குறைவாலும், கூலி உயர்வு மறுப்பாலும் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் விசைத்தறியாளர்களை வேலை நிறுத்தம் செய்யும் அளவுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கொண்டு செல்ல வேண்டாம் என, விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
30 பவுன் திருட்டு ஒருவர் கைது
-
துண்டு பிரசுரம் வழங்கிய 30 பேர் மீது வழக்கு
-
விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்படும் 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி எம்.எல்.ஏ., உறுதி
-
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
-
கள்ளக்குறிச்சியில் விலங்குகள் சரணாலயம்... அமைக்கப்படுமா; விபத்தில் சிக்குவதை தடுக்க நடவடிக்கை தேவை
-
கார் மோதி ஒருவர் படுகாயம்