'ஜாயின்ட்' வங்கி கணக்கை ஏற்க மறுக்கும் போக்குவரத்துக்கழகம்

விருதுநகர்:அரசு போக்குவரத்து துறையில் ஓய்வு பெறும் முன்னாள் ராணுவத்தினரின் தம்பதி ஜாயின்ட் வங்கி கணக்கை மதுரை மண்டலம் ஏற்க மறுக்கிறது.

அரசு போக்குவரத்து துறையில் முன்னாள் ராணுவத்தினர் டிரைவர், கண்டக்டர், வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். ராணுவத்தில் பணியாற்றும்போதே இவர்களுக்கு கணவன்- மனைவி இருவருக்குமான 'ஜாயின்ட் வங்கி' கணக்கு துவக்கப்பட்டு அதன் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.

அதே கணக்கு அரசு போக்குவரத்துக்கழகத்திலும் தொடர்கிறது. ஓய்வு பெறும் போது அந்த கணக்கை கொடுப்பது வழக்கம். ஆனால் மதுரை அரசு போக்குவரத்து மண்டலத்தில் மட்டும் இந்த ஜாயின்ட் வங்கி கணக்கு ஏற்கப்படுவதில்லை. தனித்தனி வங்கி கணக்கை சமர்பிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு பெறுகின்றனர். மற்ற அரசு போக்குவரத்து மண்டலங்களில் ஏற்கப்படும் ஜாயின்ட் வங்கி கணக்கை மதுரை மண்டலத்தில் மட்டும் ஏற்க மறுப்பது ஊழியர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Advertisement