உலக ஈரநில நாள் விழா 

நெட்டப்பாக்கம்: உலக ஈரநில நாள் சமுதாய நலத்திட்டம் சார்பில் மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஈரநில விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி துணை முதல்வர் சென்பியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சார்மிங் ஜோஸ்பியன், சமுதாய நலதிட்ட அலுவலர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் புனிதலட்சுமி, சமுதாய நலதிட்ட அலுவலர் புவனேஸ்வரி, சமுதாய நலதிட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்ற பொதுச்செயலாளர் பாலகங்காதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள் மீனாட்சி, லக் ஷயா, லீலா சங்கரி ஈரநிலத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கினர். பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு மகிழம் விதைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement