மாநில நிர்வாகக்குழு கூட்டம்

கடலுார்: கடலுாரில் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ் தலைமை தாங் கினார். மாநில பொதுசெயலாளர் வழக்கறிஞர் சத்தியசீலன் வரவேற்றார்.

புதுவை மாநில தலைவர் கலியமூர்த்தி, மாவட்டசெயலாளர்கள் கடலுார் ஆறுமுகம், விழுப்புரம் சிவபதி முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மழைமேகுணிப்பாண்டியன், வேலுமூர்த்தி பங்கேற்றனர்.

கூட்டத்தில் வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும். பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு மடைமாற்றம் செய்து வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Advertisement