ஆல்பா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
ஆல்பா கல்வி நிறுவங்களின் இயக்குனர் தனதியாகு துவக்கி வைத்தார். மழலையர், தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் 750 படைப்புகள் இடம்பெற்றன. அறிவியலில் சுகாதார முறை, கணிப்பொறி, காய்கறி மற்றும் பழங்களின் வகைகள், நீர் சுழற்சி முறை, காற்றாலை, மிருகக் காட்சி சாலை, சாலை விதிகள், சூரிய குடும்பம், உணவின் முக்கியத்துவம், முதலுதவி, தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள், எலும்புக் கூட்டின் அமைப்பு, எரிமலைக் குழம்பு, இதயம், நுரையீரல் இவற்றின் செயல்பாடுகள் குறித்த படைப்புகள் காண்பார்களின் கவணத்தை ஈர்த்தன.
மேலும் பட்டாம்பூச்சின் வாழ்க்கை சுழற்சி, பறவையின் கூடு, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், மழைநீர் சேகரிப்பு, புவி வெப்பமயமாதல், மாசுக்கட்டுப்பாடு, மின்சாரக்காந்தம், மின்சார தகடு, சூரிய குடும்பம், இயற்கையைப் பயன்படுத்தி கொசு ஒழித்தல், விபத்துகளைத் தடுக்கும் முறை, ராக்கெட், பாதுகாப்பு அமைப்பு தானியங்கி, மின்சாரமணி, பூகம்பத்தை முன் கூட்டியே அறியும் கருவி, ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் தயாரித்தல், கடலலையிலிருந்து மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட படைப்புகள் இடம்பெற்றன.
சிறந்த படைப்புகளை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு தேர்ந்தெடுத்து மாணவர்களை பாராட்டினார்.