தொழிற் கூட்டுறவு சங்க இணை உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை தொழிற் கூட்டுறவு சங்கத்தில் புதிய இணை உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க, கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
உளுந்துார்பேட்டை எழுதுபொருள் மற்றும் தையற் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு சங்கத்தில் புதிய இணை உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் குறைந்தது 3 மாதம் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 1.20 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்களாக இருக்க வேண்டும்.
தகுதியுடைய பெண்கள் விண்ணப்பங்களை https://kallakurichi.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து சான்றுகளை இணைத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் மார்ச் 7ம் தேதி மாலை 5:45 மணிக்குள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.