காலாவதி குடிநீர் விற்பனை
போடி: போடி பகுதியில் தரமற்ற தண்ணீர் பாட்டில், பாக்கெட்டுகளை விற்பனை செய்வதால் வாங்கி பருகும் மக்கள் பல்வேறு வகையில் பாதிப்பு அடைகின்றனர்.
போடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. வெயிலின் தாக்கத்தை போக்கும் வழியில் தண்ணீர் பாக்கெட், பாட்டில்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை பயன் படுத்தி போடி நகர் மற்றும் கிராம பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத தண்ணீர் பாட்டில்,பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர்.
சில பகுதிகளில் காலாவதியான தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்வதால் வாங்கி பருகும் மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தரமற்ற தண்ணீர் பாக்கெட் சப்ளை செய்வதை தடுக்க சுகாதாரத் துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
சுகாதாரம் காக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை, நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
உணவுப்பொருள் கலப்படம், போலிகள்: பெண்களுக்கு விழிப்புணர்வு திட்டம்
-
'ட்ரோன்' மூலம் மறு நில அளவீடு பணி... துவக்கம்; முதற்கட்டமாக முருங்கப்பாக்கம் தேர்வு
-
நுாறு நாள் வேலை: தொழிலாளருக்கு 4 மாதமாக சம்பளம் வரவில்லை
-
விவசாயிகள் அடையாள அட்டை திட்டம்: வேளாண் அலுவலர்களுக்கு பணிச்சுமை
-
வந்தாச்சு ஏ.டி.எம்., காஸ்
-
எம்.ஐ.டி., கல்லுாரியில் சாப்ட்வேர் பயிலரங்கம்